4ஆம் வகுப்பு மாணவன் எழுதிய 'அப்பா' கட்டுரை: குடும்பத்தையே தலைகீழாக மாற்றிய அதிசயம்

  • IndiaGlitz, [Thursday,January 23 2020]

மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதிய ’அப்பா’ குறித்த கட்டுரை அம்மாநில அமைச்சரை நெகிழ்ச்சி அடையச் செய்ததோடு, அந்த மாணவனின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மங்கேஷ் என்ற சிறுவன் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளியில் ஆசிரியர் ‘அப்பா’ குறித்து ஒரு கட்டுரை எழுதும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து மங்கேஷ் எழுதிய கட்டுரை பின்வருமாறு: என் பெயர் மங்கேஷ். அப்பா பரமேஸ்வர், காசநோயால் சமீபத்தில் இறந்துவிட்டார். அவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தபோது எனக்கான உணவு வாங்கி வருவார். பேனா வாங்கிக் கொடுப்பார். என்னை மிகவும் நேசித்தார். நானும் என் தந்தையை நேசித்தேன். அவர் கடந்த டிசம்பர் 18-ம் தேதி இறந்துவிட்டார். அன்று நானும் அம்மாவும் மிகவும் அழுதோம். ஏராளமான உறவினர்கள் அன்று வீட்டுக்கு வந்திருந்தனர். 

நீ படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று அப்பா அடிக்கடி கூறுவார். அவர் இப்போது இல்லை. அப்பா உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன். நானும் அம்மாவும் வீட்டில் பயத்துடனேயே வாழ்கிறோம். மாற்றுத் திறனாளியான அம்மாவால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. கஷ்டமாக இருக்கிறது. அப்பா, திரும்ப வந்துவிடுங்கள்'' என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையை படித்த ஆசிரியர் நெகிழ்ச்சி அடைந்து அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த கட்டுரையை படித்து பார்த்த மகாராஷ்டிரா மாநில சமூக நலத்துறை அமைச்சர் உடனடியாக அந்த சிறுவனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அனைத்து உதவிகளும் செய்ய முன்வந்துள்ளார். சிறுவனின் தாயாருக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை அளிப்பதோடு அவர் சுய தொழில் தொடங்கவும் அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். நான்காம் வகுப்பு மாணவன் எழுதிய அப்பா என்ற கட்டுரை அந்த குடும்பத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

காஜல் அகர்வால் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்!

நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாக உள்ளார் என்றும், அவர் இயக்கும் முதல் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க உள்ளார்கள்

'உண்மை ஒருநாள் வெல்லும்': ரஜினி பட வழக்கின் அதிரடி தீர்ப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த திரைப்படம் லிங்கா. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர்

ரஜினிக்கு திடீரென ஆதரவு தெரிவித்த அதிமுக அமைச்சர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசி விட்டதாக கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல்: தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்

ஜோதிடர் மனைவி ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'அசுரன்' படத்திற்கு விருது கிடைக்காவிட்டால்? பிரபல இயக்குனர் எச்சரிக்கை!

அசுரன் படத்திற்கு விருது கிடைக்கவிலை என்றால் ஒட்டுமொத்தமாக தேசிய விருதையே புறக்கணிப்போம் என இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது