close
Choose your channels

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அனல் அரசு: பீனிக்ஸ் பட தொடக்கவிழா..!

Monday, November 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சண்டைப் பயிற்சி இயக்குனர் அனல் அரசு பீனிக்ஸ் (வீழான்) திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். அவர் இப்போது இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளார்.

ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு 'பீனிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், இயக்குனராக தனது முதல் திரைப்படம் சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

கதாநாயகன் தேர்வு குறித்து அவரிடம் கேட்டபோது, "நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்" என்றார்.

செய்தியாளர்களிடம் சூர்யா பேசும்பொழுது, நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்புவதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்ததாகவும், இந்த படத்தில் நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரைத் தானே உருவாக்குவேன் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனது தந்தையின் நடை வேறு, அவரது நடை வேறு.

விஜய்சேதுபதி மகன் சூர்யா, விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத், அபி நக்ஷத்ரா, சத்யா NJ, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன், 'அட்டி' ரிஷி, பூவையார் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில் சாம் சிஎஸ் இசையில் இந்த படம் உருவாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment