close
Choose your channels

ஸ்ரேயா ரெட்டியின் 'அண்டாவ காணோம்' இசை, டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, June 22, 2017 • தமிழ் Comments

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரேயா ரெட்டி தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி நடித்துள்ள படம் 'அண்டாவ காணோம்'.

வித்தியாசமான தலைப்பில் உருவாகி வந்த இந்த படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் சென்னையில் உள்ள ஒரு பிரபல பிரிவியூ திரையரங்கில் வரும் 26ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்றும் அதனை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலரும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz