வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாய்: முன்னாள் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

கவியரசு வைரமுத்து சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய கருத்து சர்ச்சைக்குரியது என்றால் அதைவிட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது எதிர்ப்பாளர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டாள் குறித்து கூறிய தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக வைரமுத்து கூறிய பின்னரும் தொடர்ந்து அவருக்கு எதிராக அநாகரீகமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒருசிலர் அவரது குடும்பத்தினர்களை கொச்சையாக பேசி வருவது அருவருப்பின் உச்சகட்டமாக உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், பாஜக பிரமுகருமான  நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று வைரமுத்துவை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், 'கவிஞர் வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாயை தர தொண்டர்கள் தயாராக உள்ளதாக கூறியுள்ளார். மேலும்  இந்து மதத்தை யார் தவறாக பேசினாலும் அவர்களை கொலை செய்யவும் தயங்க கூடாது என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

More News

கமல் அறிவிப்பு குறித்து அப்துல்கலாம் பேரன் தெரிவித்த கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவித்துவிட்டு அன்றைய தினமே மக்களை சந்திக்கவிருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கலாம் இல்லத்தில் இருந்து கமல் தொடங்கும் கனவுப்பயணம்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தது குறித்து நேற்று பார்த்தோம்.

ஒரே தயாரிப்பாளருடன் மூன்றாவது முறையாக இணையும் கவுதம் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக் மகனும் இளையதலைமுறை நடிகருமான கவுதம் கார்த்திக் தற்போது கோலிவுட் திரையுலகில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் ஒரே தயாரிப்பாளரின் தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்

எம்ஜிஆர் மனைவி ஜானகி வேடத்தில் 'கபாலி' நடிகை

எம்ஜிஆரின் அனிமேஷன் திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்ற நிலையில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.

மீண்டும் ஒரே மேடையில் ரஜினி-கமல்

மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் ரஜினி, கமல் ஒரே மேடையில் தோன்றிய நிலையில் இன்று நடைபெற்ற எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் தொடக்க விழாவில் ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டனர்.