close
Choose your channels

எம்ஜிஆர் மனைவி ஜானகி வேடத்தில் 'கபாலி' நடிகை

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்ஜிஆரின் அனிமேஷன் திரைப்படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் தொடக்கவிழா நேற்று நடைபெற்ற நிலையில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் சதிஷ்குமாரும், அறிஞர் அண்ணா வேடத்தில் எஸ்.எஸ். ஸ்டான்லியும் நடித்து வருகின்றனர்.

பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி கேரக்டரில் நடிக்க பல பிரபல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது 'மெட்ராஸ்', 'கபாலி' படங்களில் நடித்த நடிகை ரித்விகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து நடிகை ரித்விகா கூறியபோது, 'எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாள் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். இந்த கேரக்டருக்கு நான் இப்போதே தயாராக தொடங்கிவிட்டேன். எம்ஜிஆரை திருமணம் செய்வதற்கு முன்னர் ஜானகி நடித்த திரைப்படங்களை பார்க்க தொடங்கிவிட்டேன். சமீபத்தில் 'மருத நாட்டு இளவரசி' படத்தை பார்த்தேன். அவருடைய படங்களை பார்த்து அவருடைய பாணியை மனதிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்

இந்த படத்தில் ரித்விகாவின் காட்சிகள் இந்த மாதத்தில் படமாக்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.