ரயில் நிலையத்தில் தூங்கிய கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம்: கணவன் கண்முன் நடந்த கொடூரம்

  • IndiaGlitz, [Monday,May 02 2022]

ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா என்ற மாவட்டத்தில் உள்ள ராப்பள்ளே என்ற ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் ரயிலிலிருந்து இறங்கி உள்ளார். இரவு பதினொன்று முப்பது மணி என்பதால் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென மூன்று பேர் வந்து தூங்கி கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரது கணவரிடம் உள்ள பணத்தையும் பிடுங்கி கொண்டு தலைமறைவாகினர்.

கணவர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்ததை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கணவர் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறி உதவி கேட்ட நிலையில் உடனடியாக வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகள் 3 பேரையும் பிடித்துள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர் என்பதும் அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து மூவர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், திருட்டு மற்றும் கொள்ளை பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு ஆந்திர அரசு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு தந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

ஷவர்மா சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மயக்கம்: ஒரு மாணவி பரிதாப பலி! 

கேரள மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 18 மாணவ மாணவிகள் ஷவர்மா சாப்பிட்ட நிலையில் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாகவும் அவர்களில் ஒரு மாணவி பலியானதாகவும்

ஜீ5 தளத்தின் ஹாட்ரிக் வெற்றி: பார்வையாளர்கள் மகிழ்ச்சி

ஜீ5 தளத்தில் வெளியான விமல் நடித்த 'விலங்கு' என்ற வெப்தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 'அனந்தம்', 'கார்மேகன்' ஆகிய தொடர்களும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது.

கொல்றது அவங்க நோக்கமில்லை, வேற ஏதோ காரணம் இருக்கு: 'விசித்திரன்' டிரைலர்

ஆர்கே சுரேஷ் நடித்த 'விசித்திரன்' திரைப்படம் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

காட்சிகள், பின்னணி இசையில் மிரட்டும் 'இரவின் நிழல்' டீசர்!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக முதல்வர் மனைவியிடம் இருந்து விருது வாங்கிய தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களிடம் இருந்து தமிழ் நடிகை ஒருவர் 'பவர் ஆப் வுமன்' என்ற விருதைப் பெற்றுள்ள நிலையில் இது குறித்த