முதல் முறையாக மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று: அதிர்ச்சித் தகவல் 

சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகிலுள்ள 190 நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவது மட்டுமின்றி இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கே ஏற்படுத்த முடியாமல் ஒவ்வொரு நாட்டு அரசும் திணறி வரும் நிலையில் தற்போது விலங்குகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவாது என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் ஏற்கனவே கூறிய நிலையில் தற்போது விலங்குகளுக்கு பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள பிராங்க்ஸ் என்ற உயிரியல் பூங்காவில் இருந்த ஒரு புலிக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாகவும் இதனை அடுத்து அந்த பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் சோதனை செய்தபோது 6 புலிகளுக்கும் ஒருசில சிங்கங்களுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களையும் தாண்டி விலங்குகளுக்கும் கொரோனா பரவ ஆரம்பித்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'கோபேக் சைனா வைரஸ்': தீப்பந்தம் ஏந்தி திடீரென கோஷம் போட்டதால் பரபரப்பு

கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய அரசு கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் அரசுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

நேற்றிரவு 9 மணியின் சாட்டிலைட் புகைப்படம்: இணையத்தில் வைரல் 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற கூறினார் இந்த நிகழ்வை கோடிக்கணக்கான இந்தியர்கள் நிகழ்த்தி நாட்டின் ஒற்றுமையை நிரூபித்தனர்

9 மணி விளக்கேற்றும் நிகழ்வு: ஆர்வக்கோளாறால் ஏற்பட்ட அசம்பாவிதம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு கொரோனாவுக்கு எதிரான போரில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிப்பதற்காக

டுவிட்டரில் விண்ணப்பித்தாலும் உதவி கிடைக்கும்: தமிழக முதல்வரின் செயல்

முன்பெல்லாம் அரசிடம் இருந்து ஒரு உதவி தேவை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து அது அரசின் கவனத்திற்கு சென்று அதன்பின்னர்

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.