close
Choose your channels

பிரபல ஹீரோவுக்காக அனிருத் கம்போஸ் செய்த பாடல்.. முதல் முறை கேட்கும்போதே ஆட்டம் தான்..!

Sunday, May 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளர் அனிருத் பிரபல ஹீரோவின் படத்திற்காக கம்போஸ் செய்த பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை முதல் முறை கேட்கும் போதே ஆட்டம் போட வைக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் ’தேவாரா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்றும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற Fear Song என்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் ஐந்து மொழிகளிலும் வெளியாகிய நிலையில் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து பாடியுள்ளார். தமிழில் விஜய் நடித்த ‘லியோ’ படத்திற்கு பாடல் எழுதிய விஷ்ணு எடாவன்ன் இந்த பாடலை எழுதி இருக்கும் நிலையில் இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு, ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment