close
Choose your channels

கவின் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் அனிருத்: நாயகியும் அறிவிப்பு..!

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதோடு இந்த படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் மற்றும் சதீஷ் இணையும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கவின் ஜோடியாக அயோத்தி பாடத்தில் நடித்த பிரீத்தி அஸ்ராணி நடிக்க உள்ளார் என்பதும் அவரும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக இசையமைப்பாளர் அனிருத், ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment