பா ரஞ்சித் - விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தற்போது புதுமுகங்கள் நடிக்கும் ’நட்சத்திரங்கள் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கும் படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவருடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் படங்களுக்கு முதல் முறையாக அனிருத் இசை அமைத்தால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணம் செய்யலாமா என கேட்ட ரசிகருக்கு புகைப்படத்தின் மூலம் பதிலளித்த நடிகை!

திருமணம் செய்து கொள்ளலாமா? என தொலைக்காட்சி நடிகை ஒருவரை ரசிகர் ஒருவர் கேட்ட நிலையில் அதற்கு நாசுக்காக புகைப்படம் ஒன்றின் மூலம் அந்த நடிகை பதிலளித்துள்ளது

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்த பலனும் இல்லை: பிரபல இயக்குனர் 

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் எந்தவித பலனும் இல்லை என பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'ஜெய்பீம்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த கேரள எம்.எல்.ஏ!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

'ராதே ஷ்யாம்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த படக்குழுவினர்!

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ராதே ஷ்யாம்' என்பது தெரிந்ததே.

அதர்வாவின் 'தள்ளிப் போகாதே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அதர்வா நடித்த 'தள்ளிப் போகாதே' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.