close
Choose your channels

மீண்டும் பாலிவுட் செல்லும் அனிருத்.. இன்னொரு ரூ.1000 கோடி வசூல் படமா?

Friday, May 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் மீண்டும் ஷாருக்கான் நடிக்கும் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த படமும் ரூ.1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’ஜவான்’ திரைப்படத்தை அடுத்து ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படம் 'கிங்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் சுஜாய் கோஷ் என்பவர் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகையாக அறிமுகம் ஆக இருக்கிறார். எனவே முதன்முதலாக ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படத்தில் அனிருத் இசை மற்றும் பின்னணி இசை பணியை பார்த்து ஆச்சரியமடைந்த ஷாருக்கான் ’கிங்’ படத்திற்கும் அவரையே ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் ஷாருக்கான் நடிக்கவுள்ள ‘கிங்’ படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கும் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையமைத்த முதல் பாலிவுட் படமே ரூ.1000 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ’கிங்’ படமும் ரூ.1000 கோடி ரூபாய் வசூல் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.