அஜித் விஜய் மோதலில் இணைந்த அனிருத்.. யாருக்கு சாதகம்?

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே மீண்டும் ஒருமுறை அஜீத் விஜய் மோதல் இருக்கும் என்று அந்த மோதலுக்கு அனிருத் காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் 'ரஞ்சிதமே’ என்ற சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் நடித்த ’துணிவு’படத்தின் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் இந்தப் பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் நேற்று இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்து இருந்தார். இந்த பாடல் நவம்பர் மூன்றாவது வாரம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் அதே நவம்பர் மூன்றாவது வாரம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் மூன்றாவது வாரம் வெளியாக இருக்கும் ‘வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களில் இடம்பெற்ற பாடலையும் பாடியது அனிருத் தான் என்பது ஆச்சரியமான ஒற்றுமையாக கருதப்படுகிறது

‘வாரிசு’ மற்றும் 'துணிவு’ ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் பாடியுள்ள பாடல்களில் எந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும், அனிருத் யாருக்கு சிறப்பாக பாடி இருப்பார் என்ற விவாதமும் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்வேன்: கமல்ஹாசன் எச்சரிக்கை யாருக்கு?

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான அடுத்த புரமோ வீடியோவில், 'தேவைப்பட்டால் நானே ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற முடியும் என்று கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

ஓப்பனாக ராபர்ட் மாஸ்டர் கேட்ட கேள்வி.. ரக்சிதாவை காப்பாற்றிய கமல்ஹாசன்!

 ராபர்ட் மாஸ்டர் தனது மனதில் இருப்பதை ஓப்பனாக ரக்சிதாவில் கேள்வி கேட்ட நிலையில் அந்த கேள்விக்கு பதில் சொல்ல ரக்ஷிதா திணறிக்கொண்டிருக்கும் போது கமல்ஹாசன் காப்பாற்றிய வீடியோ சற்று

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த அடுத்தடுத்த ஷாக்.. விஷ்ணுவிஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'லால் சலாம்' என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே.

டி 20 உலகக்கோப்பை போட்டிக்கு பின் பிரபல கிரிக்கெட் வீரர் பாலியல் வழக்கில் கைது!

பாலியல் புகார் காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அதை சொல்ல நீங்க யாரு? தனலட்சுமியை லெஃப்ட் ரைட் வாங்கிய கமல்ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமியை கமல்ஹாசன் கடந்த வாரம் பாராட்டி நிலையில் இந்த வாரம் லெஃப்ட் ரைட் வாங்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது