close
Choose your channels

அஜித் விஜய் மோதலில் இணைந்த அனிருத்.. யாருக்கு சாதகம்?

Sunday, November 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே மீண்டும் ஒருமுறை அஜீத் விஜய் மோதல் இருக்கும் என்று அந்த மோதலுக்கு அனிருத் காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் 'ரஞ்சிதமே’ என்ற சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் நடித்த ’துணிவு’படத்தின் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் இந்தப் பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் நேற்று இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்து இருந்தார். இந்த பாடல் நவம்பர் மூன்றாவது வாரம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் அதே நவம்பர் மூன்றாவது வாரம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் மூன்றாவது வாரம் வெளியாக இருக்கும் ‘வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களில் இடம்பெற்ற பாடலையும் பாடியது அனிருத் தான் என்பது ஆச்சரியமான ஒற்றுமையாக கருதப்படுகிறது

‘வாரிசு’ மற்றும் 'துணிவு’ ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் பாடியுள்ள பாடல்களில் எந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும், அனிருத் யாருக்கு சிறப்பாக பாடி இருப்பார் என்ற விவாதமும் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos