close
Choose your channels

அனிருத் குரல், 50 டான்சர்கள், பிரபுதேவா டான்ஸ்: மாஸ் காட்டும் பிரபலத்தின் படம்!

Tuesday, November 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரின் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை பிரபுதேவா மாஸ்டர் நடன இயக்கம் செய்வதாகவும், அனிருத் இந்த பாடலை பாடி உள்ளதாகவும், இந்த பாடலில் 50க்கும் மேற்பட்ட டான்ஸர்கள் நடனமாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் அஜித், விஜய்க்கு இணையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்தவர் நடிகர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் நடித்துள்ள ’அந்தகன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘டோரா புஜ்ஜி’ என்ற பாடல் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்ய, அனிருத் பாடியுள்ளார். பிரபு தேவா நடன இயக்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட டான்ஸர்களுடன் பிரசாந்த் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்ட தாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த பாடலின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதேபோல் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தியாகராஜ இயக்கியுள்ளார். கலைப்புலி தாணு இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.