அனிதா சம்பத்தின் உருக்கமான பேச்சும், முரண்பாடும்! முதல் புரமோ காட்சிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருசில போட்டியாளர்கள் இன்னும் யார் என்று கூட தெரியாத நிலையில் கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் ஹீரோ ஆகிவிட்டார் அனிதா சம்பத். அவரது உருக்கமான பேச்சு ஒருபுறம் நெகிழ்வை தந்தாலும், அதற்கு நேர்மாறாக அவருடைய நடவடிக்கை இருப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது

அனிதா சம்பத் கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவுக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார். குறிப்பாக அவர் சுரேஷ் சக்கரவர்த்தியை தொடர்ச்சியாக வம்புக்கு இழுத்து வருவது ஆரம்பத்தில் சுவராசியமாக இருந்தாலும் போகப் போக அவர் எல்லை மீறுவது போன்றும், அவரே தனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொள்வது போன்றும் 

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் அவருடைய உருக்கமான பேச்சும், சக போட்டியாளர்களிடம் அவர் உரையாடுவதும் முரண்பாடாக உள்ளது. எனக்கு அட்ரஸ் எதுவும் கிடையாது, நமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நல்லா இருக்கும் என்றும்,  என் வீட்டில் நான்தான் பெற்றோர் என்றும், என்னுடைய அப்பா அம்மா தம்பி எல்லாம் குழந்தை மாதிரி என்று கூறுகிறார். ஆனால் சக போட்டியாளர்களிடம் பேசும்போது, ‘நான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னுடைய பெயரை சம்பாதித்து இருக்கிறேன், அதைக் கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்றும், யார் கூடவும் என்னைக் கம்பேர் செய்யாதீர்கள் என்றும், நான் எல்லாரையும் சகித்துக் கொண்டு போகும் பழக்கம் எனக்கு கிடையாது என்று கூறுகிறார்

இவ்வாறு மாறிமாறி அனிதா சம்பத் பேசும் காட்சிகள் அவரது குணத்தை ஓரளவுக்கு வெளிக்காட்டியுள்ளது

More News

ரஜினியை கிண்டல் செய்து படமெடுக்கின்றாரா ராம்கோபால் வர்மா?

பிரபல தெலுங்கு நடிகர் ராம்கோபால் வர்மாவின் படங்கள் மட்டுமின்றி அவருடைய டுவிட்டுகளும் சர்ச்சைக்கு உரியதாக இருக்கும் என்பது தெரிந்ததே.

அரசியல் வரலாற்றில் பிரதமர் மோடியின் புதிய மைல்கல்… குவிந்து வரும் பாராட்டுகள்!!!

ஜனநாயக முறையிலான தேர்தலைக் கொண்டிருக்கும் இந்தியாவில் பிரதமர் மோடி தொடர்ந்து 20 ஆண்டுகளாக எவ்வித இடைவெளியும் இன்றி தலைவர் பதவி வகித்து வருகிறார்.

'இரண்டாம் குத்து' டீசரில் விஜய்,விஜய்சேதுபதியின் குட்டிக்கதை!

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டுகுத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி திரைப்படங்களும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை

சோஷியல் மீடியாவிற்கு அடிமையாகாத பெண் வேண்டும்… இணையத்தில் வைரலாகும் விளம்பரம்!!!

திருமணத்திற்கு பெண்ணைத் தேடும் விளம்பரம் ஒன்று இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து பல்கலையில் படிக்க பட்டியலின மாணவிக்கு உதவிய தமிழ் நடிகர்!

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்க பட்டியலின மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகர் ஒருவர் உதவி செய்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது