close
Choose your channels

சுஷாந்த்சிங் ராஜ்புத் முன்னாள் காதலிக்கு திருமணம்: தொழிலதிபரை மணக்கின்றார்!

Monday, November 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய முன்னாள் காதலிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மற்றும் நடிகை அங்கிதா லோஹண்டே ஆகிய இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டுகளில் டேட்டிங் செய்து வந்தனர் என்பதும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் விக்கி ஜெயின் என்பவரை காதலித்து வந்த அங்கிதா வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டிசம்பர் 12, 13, 14 தேதிகளில் ஒரு தேதியில் இந்த திருமணம் நடைபெறும் என்றும் இந்த திருமணத்திற்கான தேதி முடிவு செய்யப்பட்டு உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் அங்கீதா தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து நடிகை அங்கிதாவுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.