'அண்ணாத்த', 'வலிமை' மோதுவது உறுதியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தீபாவளி தினத்தில் ’அண்ணாத்த’, ரிலீஸ் ஆவதால் வேறு பெரிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. குறிப்பாக தீபாவளி அன்று ரிலீசாகும் என்று கூறப்பட்ட அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ஆயுதபூஜைக்கு ரிலீசாகி விடும் என்றும் அல்லது தீபாவளி முடிந்து ரிலீசாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘வலிமை’ திரைப்படமும் தீபாவளி அன்றுதான் வெளியாக இருப்பதாகவும், வெகு விரைவில் ரிலீஸ் செய்து உடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் மோதுமா? என்பதை ‘வலிமை’ குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பாண்டிச்சேரியில் தனுஷ்-நித்யா மேனன்: வைரல் புகைப்படங்கள்!

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரேமேன்' மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான 'மாறன்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன என்பதும்

சூர்யா, கார்த்தி, அதிதிஷங்கரின் 'விருமன்': பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்! 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த ட்வீட்களை சூர்யா, ஷங்கர்,

மாறன் சகோதரர்களுடன் விஜய் சந்திப்பு: வைரல் புகைப்படம்

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் 'பீஸ்ட்'  படப்பிடிப்பில் விஜய்

தளபதி விஜய்யுடன் ஜெயம் ரவி சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்

தளபதி விஜய் நேற்று சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அதே நிகழ்ச்சிக்கு வந்த ஜெயம் ரவி அவரை சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 

ஜனவரி முதல் நாங்கள் நால்வர்: 2வது குழந்தை அறிவிப்பை வெளியிட்ட நடிகை!

தமிழ் நடிகை ஒருவர் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது