close
Choose your channels

'அண்ணாத்த', 'வலிமை' மோதுவது உறுதியா?

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தீபாவளி தினத்தில் ’அண்ணாத்த’, ரிலீஸ் ஆவதால் வேறு பெரிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது. குறிப்பாக தீபாவளி அன்று ரிலீசாகும் என்று கூறப்பட்ட அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் ஆயுதபூஜைக்கு ரிலீசாகி விடும் என்றும் அல்லது தீபாவளி முடிந்து ரிலீசாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘வலிமை’ திரைப்படமும் தீபாவளி அன்றுதான் வெளியாக இருப்பதாகவும், வெகு விரைவில் ரிலீஸ் செய்து உடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் மோதுமா? என்பதை ‘வலிமை’ குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.