close
Choose your channels

மறுபடியும் பிராங்க்கா? 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகாவை கடுமையாக விமர்சனம் செய்த பிரபலம்..!

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னரான ஸ்ருதிகாவை பிரபலம் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்யும் வீடியோ புரமோவாக வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் பிராங்க்கா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர் பூஜாவின் பெரியம்மா பிளாக்கை பிராங்க் செய்தார் என்பதும் அது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’கேபிஒய் சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது

இந்த நிகழ்ச்சியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் அவரிடம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியான ஸ்ருதிகா, ‘நான் லேடி லியோனி’ என்று சுருதிகா கூறினார். அப்போது லியோனி, ‘என்னுடைய வாய்ஸ் போல் நீ பேசி காட்டினால் உன்னை நான் லேடி லியோனி என்று ஒப்புக்கொள்கிறேன் என்று கூற அப்போது ஸ்ருதிகா பேசிய போது ’நீ எல்லாம் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்று வெளியே சொல்லாதே, என்னுடைய வாய்ஸ் கூட உன்னால் பேச முடியவில்லை’ என்று கூறினார்

அதன் பிறகு பாலா நான் உங்கள் வாய்ஸை பேசுகிறேன் என்று கூறி பேசியவுடன் ’என்னுடைய வாய்ஸ் எனக்கே மறந்து விட்டது என்று இருவரையும் கொஞ்சம் கோபமாகவே லியோனி விமர்சனம் செய்தார். இது உண்மையாகவே அவர் விமர்சனம் செய்ததா? அல்லது பிராங்க் ஆக இருக்குமா? என்பதை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment