வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் ஒரு கேஜிஎப் படம்.. ஹீரோ இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

ஏற்கனவே ’கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கோலார் தங்க வயல் கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இதே பின்னணியை கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ’தங்கலான்’ என்ற படமும் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கோலார் தங்க வயல் பின்னணியில் மீண்டும் தமிழில் ஒரு படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணியில் இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக அவர் சூர்யா நடிக்க இருக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் கேஜிஎப் பின்னணியில் உருவாகும் படத்தை இயக்குவார் என்றும் அதில் தனுஷ் நாயகனாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் என்ற நிலையில் கேஜிஎப் பின்னணி கொண்ட இந்த படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மெட் காலா- பேஷன் நிகழ்ச்சியில் பூனை நடைபோட்ட இந்திய நடிகைகள்… வைரல் புகைப்படம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட் காலா பேஷன் நிகழ்ச்சியில் இந்திய நடிகைகளான நடிகை ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்

பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்படும் 'ஏஐஆர்': தமிழ் உள்பட 6 மொழிகளில் பார்க்கலாம்..! 

அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) திரைப்படம்

ஷாருக்கானுக்காக கொள்கையை மாற்றினாரா நயன்தாரா? திடீரென மும்பை சென்ற ரகசியம் என்ன?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அஜித் போலவே தான் நடிக்கும் எந்த படத்தின் புரமோஷனுக்கும் செல்ல மாட்டார் என்பதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த படங்களில் நடித்த

இவ்வளவு விலையா? புதிய தொழில் துவங்கிய ஷாருக் மகன் ஆர்யன்கானை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் புதிய ஆடை விற்பனை நிறுவனம் ஒன்றை துவங்கியிருந்தார்

டூப் இன்றி அந்தரத்தில் பறந்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த பிரபல நடிகை.. வைரல் வீடியோ..!

பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு அந்தரத்தில் பறந்து டூப் இன்றி ஸ்டண்ட் காட்சியில் தைரியமாக நடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது