close
Choose your channels

விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் பட ரீரிலீஸ்? பக்காவாக திட்டமிடும் கலைப்புலி தாணு..!

Tuesday, May 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், த்ரிஷா நடித்த ’கில்லி’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்து என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜய்யின் ’வில்லு’ உட்பட ஒரு சில படங்களை மீண்டும் ரீரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு படமான ’சச்சின்’ திரைப்படத்தையும் ரீரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் ’சச்சின்’. இந்த படத்தை பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான் இயக்கியிருந்தார் என்பதும் இந்த படத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷாபாசு, வடிவேலு, சந்தானம் உட்பட பலர் நடித்திருந்தனர் என்பது இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க ஊட்டியில் மடமாக்கப்பட்டிருந்த இந்த படம் ஒரு அருமையான காதல் படமாக உருவாகியது என்பது இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியான அதே தினத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ கமல்ஹாசன் நடித்த ’மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

’சச்சின்’ தமிழில் வெற்றி பெற்றதை அடுத்து ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியானது என்பதும் யூடியூபில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை ரீரிலிஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு திட்டமிட்டு இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் ரீரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment