JNU மாணவர்கள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், அனுராக் காஷ்யப்..!

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக கேட்வே ஆஃப் இந்தியாவில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் பாடாலாசிரியர் விஷால் தத்லானி ஆகியோர் இணைந்தனர்.அனுராக் காஷ்யப் மாணவர்களுடன் தனது ஒற்றுமையைக் காட்ட எதிர்ப்புத் தளத்தில் இருப்பதாகவும் ஜே.என்.யூ வளாகத்தில் நடந்த தாக்குதல்களுக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். விஷால் தத்லானி மதச்சார்பற்ற இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறினார்.

“இங்கு நடந்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டங்களை நான் கவனித்தேன். மாணவர்களுடன் சேர முடிவு செய்தேன். குற்றவாளிகளை அவர்கள் சொந்த மக்கள் என்பதால் அரசு கைது செய்ய விரும்பவில்லை. வன்முறையைத் தடுக்க காவல்துறை ஜே.என்.யூக்குள் நுழையவில்லை ஆனால் ஜாமியா மிலியா இஸ்லாமியாவுக்குள் நுழைந்தனர். அவர்கள் மாணவர்களை அடித்து நொறுக்கினர்” என்றூ அனுராக் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசினார்.

“நாங்கள் மதச்சார்பற்ற இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்த போராட்டத்தில் எனக்கு பின்னால் வேறு எந்த நோக்கமும் இல்லை. அனைவருக்கும் ஒரு இந்தியா” என்று விஷால் தத்லானி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜனவரி 5ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவின் முன்பு ஏராளமான மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழுக்கமிட்டு ஞாயிற்றுக் கிழமை நடந்த வன்முறைக்கு எதிராக ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.மாணவர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இரவில் மாணவர்களும் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நாங்கள் ஜே.என்.யூவுடன் நிற்கிறோம். மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்” என்ற வாசகங்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே.என்.யூவுக்குள் நடந்த வன்முறையில் காயம்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

More News

செல்போனால் வரும் பேராபத்து

செல்போன்கள் மன அளவிலும் உடல் அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் செல்போன் வருவதாக நினைப்பது கூட பேராபத்தை விளைக்கும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரரை போற்று.. யாரோட வாழ்க்கை கதை தெரியுமா..!?

கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி சூரரை போற்று படம் எடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் அடுத்த படத்தில் 'பிகில்' பட நடிகை 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும்

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி! பரபரப்பு தகவல்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 

சரியான நேரம் வந்தால் அஜித்துடன் படம் பண்ணலாம்..! ஏ. ஆர். முருகதாஸ் பேட்டி.

அஜித்தும் நானும் சரியான சந்தர்ப்பத்தில் இணைவோம் எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.