close
Choose your channels

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி! பரபரப்பு தகவல்

Tuesday, January 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கார்த்தியின் வெற்றிப்படங்களில் ஒன்றான ’கொம்பன்’ படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா, மீண்டும் கார்த்தி நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி ஏற்கனவே ‘ரெமோ’ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ’சுல்தான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் தற்போது கார்த்தி மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்தே கார்த்தி, சூர்யா தயாரிப்பில், கொம்பன் முத்தையா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.