பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா ஷெட்டி!

  • IndiaGlitz, [Tuesday,December 24 2019]

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் நடித்த பாகுபலி மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘பாகமதி’ என்ற படமும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவனுடன் நிசப்தம் என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார்

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ’என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த அனுஷ்கா தற்போது மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அனுஷ்கா ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதையை குருதிப்புனல் படத்தின் ஒரிஜினல் படமான துரோக்கால் படத்தின் கதையை எழுதிய கோவிந்த் நிலானி என்பவர் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

More News

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்தும் அவரது படத்தை இயக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் மிஸ் செய்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது

தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு, 100 நாட்கள் கெடு: சினிமாவுக்கு புதுக்கட்டுப்பாடு. 

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களின் படங்கள் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அவற்றில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவது

சிறுமிகள் ஆபாச படம் பார்த்த சென்னை முதியவர் கைது!

குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் மற்றும் டவுன்லோட் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்

வாயில் பெவிகுவிக்கை ஊற்றி 52 வயது நபரின் கழுத்தை அறுத்த இளம்பெண்: சென்னையில் பரபரப்பு

தந்தை வயதில் உள்ள 52 வயது நபர் ஒருவரை வாயில் பெவிகுவிக்கை ஊற்றி சத்தம்போட விடாமல் செய்து கழுத்தை அறுத்து இளம்பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

உப்புநீரில் ஓடும் பைக் எஞ்சின்: 'ஹீரோ' மதி போல் ஒரு நிஜ கேரக்டர்

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே