ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான்கான் படத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,April 11 2024]

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற திரைப்படத்தை தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் சல்மான்கான் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் சல்மான் கானுடன் இணையும் திரைப்படத்திற்கு ’சிக்கந்தர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் ஏஆர் முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சல்மான் கான் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு மிக விரைவில் தொடங்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

'பிரேமலு' உட்பட இந்த வார ஓடிடி படங்கள் என்னென்ன? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன

'வேட்டையன்' படத்தில் மாஸ் இண்ட்ரோ பாடல்.. 'அண்ணாமலை' 'பாட்ஷா' ரேஞ்சுக்கு இருக்குமா?

கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இண்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது.

ரஜினி - விஜய் இடையே சம்பள போட்டி.. 'தலைவர் 171' படத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித் - விஜய் என்ற போட்டி இருந்த நிலையில் தற்போது விஜய் ஒரு படி மேலே போய் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு சென்றுவிட்டார் என்றும்

என்னங்கடா செய்றீங்க.. விஜய் டிவி சீரியலில் குளியல் காட்சி.. விரைவில் சென்சார் வந்துவிடுமோ?

ஏற்கனவே இந்தி உட்பட பிற மொழி சீரியல்களில் படுக்கை அறை காட்சிகள், லிப்கிஸ் காட்சிகள் உட்பட குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது

'குக் வித் கோமாளி' சீசன் 5.. முதல் எபிசோடு படப்பிடிப்பு.. விஷால் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.