முடிவுக்கு வந்தது ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது ’ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் மைனஸ் டிகிரி செல்சியஸில் நடைபெற்றது என்பதும் த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து விரைவில் போஸ்ட் புரோடக்ஷன் பணி தொடங்கும் என்றும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏ.ஆர்.முருகதாஸ் கதை வசனம் எழுதிய இந்த படத்தை எம் சரவணன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ’எங்கேயும் எப்போதும்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சி. சத்யா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் த்ரிஷா டூப் இன்றி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது

More News

எனக்கு பிடித்த நடிகரே விஜய் தான்..! பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.

தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும்?” என்று பதில் கூறினார்.

தலைமை தேர்தல் அதிகாரியிடமே ரூ.75,000 கொள்ளை..! விமான பயணத்தில் நடந்த சம்பவம்.

ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு வந்தார். விமானப் பயணத்தின்போது அவரது பையில் வைத்திருந்த பணத்தை யாரோ கொள்ளையடித்திருக்கிறார்கள்

மீண்டும் நயன்தாரா புரபோஸ் செய்தால்? சிம்புவின் அசத்தல் பதில்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு மற்றும் நயன்தாரா காதலித்ததாகவும் அதன் பின்னர் இருவரும் ஒரு சில காரணத்தால் பிரேக்-கப் ஆகி பிரிந்து விட்டதாகவும் கோலிவுட் திரையுலகில் செய்திகள் வலம் வந்தது 

ஆர்யாவுடனான நட்பை முறித்துக் கொண்ட விஷால்: பரபரப்பு தகவல்

தமிழ் திரையுலகில் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நெருங்கிய நட்புடன் உள்ளவர்கள் என்றும் இருவரும் இணைந்து நடித்த 'அவன் இவன்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

யோகிபாபுவுக்காக மூன்று மாதம் காத்திருந்த பிரபல நடிகர்: ஒரு ஆச்சரிய தகவல்

பிரபல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படங்களில் ஒன்று 'கோமாளி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்