ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தர்பார்’ படத்தில் இடம் பெற்ற ’டம்டம்’ என்ற பாடலின் ஒரு சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு உள்ளார். 45 வினாடிகள் மட்டுமே ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவில் ரஜினியின் அட்டகாசமான நடனம் நடனம் மற்றும் நயன்தாராவின் ரொமான்ஸ் ஆட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

அனிருத் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை நாகேஷ் அஜிஸ் என்பவர் பாடியுள்ளார். பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் திரையில் தோன்றும்போது பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

More News

அஜித்துக்கு அழைப்பு விடுத்த டுவிட்டர்: ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித், தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட வரமாட்டார் என்பதும், அவருக்கு எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்பதும் தெரிந்ததே.

சென்னையில் கோலம் போட்ட 6 மாணவிகள் கைது: பெரும் பரபரப்பு

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை உள்பட தமிழக நகரங்களில்

கவர்ச்சி உடையணிந்து உடற்பயிற்சி: 47 வயது சிம்பு பட நடிகையின் வீடியோ வைரல்

சிம்பு நடித்த 'மன்மதன்', பிரபாஸ் நடித்த 'சாஹோ', ஜிவி பிரகாஷ் நடித்த 'அடங்காதே' போன்ற தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை மந்திராபேடி.

தளபதி 64: விஜய்சேதுபதியுடன் மோதிய மாளவிகா மோகனன்?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும்

அஜித்தின் 'வலிமை'யில் இணைந்த தனுஷ், கார்த்தி பட நடிகர்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.