இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்!!!

  • IndiaGlitz, [Monday,November 30 2020]

 

பிரிட்டிஷ் அகாடமி ஒன்று வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு உள்ளது. அந்தத் திட்டத்திற்கு நமது இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் இந்த பணி தனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி கலைகளுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது பிரிட்டிஷ் அகாடமி (பாஃப்தா). இந்த அமைப்பு இந்தியாவில் ப்ரேக்த்ரூ (இளம் திறமையாளர்களை தேர்வு செய்வது) எனும் பெயரில் ஒரு புதிய செயல் திட்டத்தை உருவாக்கி உள்ளது.  இந்தியாவில் திரைப்படங்கள், விளையாட்டு அல்லது தொலைக்காட்சியில் செயல்படும் இளம் 5 திறமையாளர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்க உள்ளது.

இப்படி தேர்ந்தெடுக்கப்படும் இளம் திறமையாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தேவையான துறை ஆலோசனைகள், சர்வதேச அளவில் தொடர்புகள், பாஃப்தா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, திரையிடல்களுக்கு இலவச அனுமதி போன்ற பல்வேறு வசதிகளை பாஃப்தா  அமைப்பு செய்து கொடுக்க இருக்கிறது.

நெட்ஃபிளிக்ஸ் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய முயற்சிக்கு இந்தியாவின் சார்பாக நமது இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர், “நம்பிக்கை தரும் கலைஞர்களை உலகப் புகழ் பெற்ற ஒரு அமைப்பு ஆதரவு தரும் தனித்துவமான வாய்ப்பு இது. இதன் மூலம் உலகின் மற்ற இடங்களில் இருக்கும் திறமையாளர்களின் தொடர்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பாஃப்தா விருதுகளில் வென்றவர்கள் மற்றும் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும். இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டப்படும் அந்த அற்புதத் திறமைகளை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

More News

பா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

ஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்??

தென் ஆப்பிரிக்காவை தவிர சில தெற்காசிய நாடுகளில் மட்டுமே யானைகள் வாழுகின்றன.

பாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா என்ட்ரி ஆகும் வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த போட்டியாளர்கள் அர்ச்சனாவின் வரவிற்குப் பின்னர் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு குரூப்

விஜய் சேதுபதியை பார்க்க ரிஸ்க் எடுத்த கிராம மக்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஜனநாதன் இயக்கி வரும் 'லாபம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்று வருகிறது

ரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி குறித்த தெளிவான ஒரு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய