அமலாபால் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

  • IndiaGlitz, [Tuesday,July 21 2015]

'தலைவா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை அமலாபால், அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டு நடிப்பதை குறைத்து கொண்டார். சமீபத்தில் தயாரிப்பாளராக மாறிய அமலாபால், பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த திரைப்படம் என்பதால், ஒரு சமூக அக்கறையோடு இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, நாசர்,அசோக் செல்வன் மற்றும் பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்திற்கு சாபுசிரில் கலை இயக்குனராக பணிபுரியவுள்ளார்.

More News

ஆறு வருடங்களுக்கு பின் மீண்டும் அபியுடன் இணையும் கணேஷ்?

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு பெரும்புகழ் தேடித்தந்த படங்களில்...

கவர்ச்சி நடிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது 'விஜய் 59"...

'பாகுபலி'யால் தள்ளிப் போனதா நயனின் 'மாயா?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும்....

பிரசாந்த் நடித்த 'சாஹசம்' படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி

1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த், நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'சாஹசம்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகிறார்...

ஒரு வாரம் முன்னதாக அருள்நிதியின் போலீஸ் படம் ரிலீஸ்?

டிமாண்ட்டி காலனி' வெற்றிப்படத்தை அடுத்து அருள்நிதி நடித்த நகைச்சுவை படமான 'நாலு போலீஸும் நல்லா இருந்தா ஊரும்'