close
Choose your channels

கவர்ச்சி நடிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்?

Tuesday, July 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது 'விஜய் 59" படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தை இயக்குவது யார் என்ற செய்திகளும், அந்த படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு வரும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் ஒரு பிரபல கவர்ச்சி நடிகை, ஒரு படத்திலாவது விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை சமீபத்தில் அளித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'குசேலன்' படத்தில் வடிவேலுக்கு ஜோடியாகவும், குரு என் ஆளு, ஒன்பதுல குரு, மிருகம், போன்ற படங்களிலும் நடித்த நடிகை சோனா தான் இந்த ஆசையை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் மற்றும் அவரை இயக்கும் இயக்குனர்கள் சோனாவின் ஆசையை அடுத்தடுத்த படங்களில் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.