டிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இந்த இரண்டு நாட்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு நடந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருந்துக்கு பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்களை இந்திய தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் மகள் இவாங்கா, மருமகன் ஆகியோர்களுக்கு நேற்றிரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஒருசில மாநில முதலமைச்சர்கள் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்

இந்த நிலையில் இந்த விருந்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டிரம்புக்கு அறிமுகப்படுத்திய உடனே அவருடன் கைகுலுக்கிய டிரம்ப், ரஹ்மானிடம் சில வினாடிகள் பேசிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி

உலகம் முழுவதும் ட்ரம்ப்பின் புகைப்படங்களை நெட்டிசன்கள் டிசைன் டிசைனாக  கலாய்த்து வருவது வழக்கம்.

சச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் குறித்து பேசினார். வருகை தந்த டிரம்ப், சச்சின் பெயரை, “சூ-சின் டெண்டுல்கர் (சச்சின் டெண்டுல்கர்) என்று உச்சரித்தார்.

'நெற்றிக்கண்' பிரச்சனை: விசுவை சமாதானம் செய்த தனுஷ்!

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியான 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் மேனகா கேரக்டரில்

மூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு

பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்த திரைப்படம் 'பொன்மாணிக்கவேல்'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

3 நிமிடங்களில் 30 தோப்புக்கரணம் போட்டால் இலவச டிக்கெட்..!

உட்கார்ந்து எழும் இயந்திரத்தில் 3 நிமிடங்களில் 30 முறை தோப்புக்கரணம் போடுவதுபோல் அமர்ந்து எழுந்தால் இலவசமாக டிக்கெட் பெறலாம்.