ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட 'மறக்குமா நெஞ்சம்' சென்னை வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,September 25 2023]

இசைப்புயல் ஏஆர் ரகுமான் சமீபத்தில் சென்னையில் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார் என்பதும் இந்த இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது தெரிந்ததே.

மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு பொறுப்பேற்ற ஏஆர் ரஹ்மான் மன்னிப்பு கேட்டதோடு, டிக்கெட் வாங்கி இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கு மீண்டும் பணம் திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வரும் நிலையில் சற்றுமுன் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த இசை நிகழ்ச்சியில் நடந்த சில சுவாரஸ்யமான காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். நான்கு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் ஏஆர் ரகுமானின் முதல் படமான ’ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ’சின்ன சின்ன ஆசை’ பாடல் முதல் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம் பெற்ற பாடல் வரை பாடகர் பாடகியர்கள் பாடிய காட்சிகள் உள்ளன. ஏஆர் ரகுமானும் அவரது மகனும் சில பாடல்கள் பாடி உள்ளனர்.

இவ்வளவு அருமையாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் குளறுபடி மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் இந்த இசை நிகழ்ச்சி பாராட்டப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரு கையில் பெரியார், இன்னொரு கையில் விநாயகர்.. 'வணங்கான்' பர்ஸ்ட் லுக் சொல்லும் செய்தி என்ன?

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் நடித்த அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்.. விக்ரமுக்கு தெரியாமல் வெளியானதா?

சியான் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் விக்ரமுக்கு தெரியாமல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

'லியோ' அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி.. தமிழக விஜய் ரசிகர்கள் அதிருப்தி..!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஒரு

'குட் நைட்'  மணிகண்டன் அடுத்த படத்தை இயக்கிய யூடியூப் பிரபலம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பிரபலமாகி, அதன் பிறகு சூப்பர் ஹிட் படமான  'குட் நைட்' திரைப்படத்தில் நாயகனாக நடித்த மணிகண்டன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கினேன்.. விஜய் சேதுபதி கூறிய ஆச்சரிய தகவல்..!

ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' என்ற படத்தில் தான் நடித்ததாகவும் அந்த படத்தில் நடிக்க எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.