close
Choose your channels

 AI மூலமாக மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏஆர் ரஹ்மான்: 'லால் சலாம்' படத்தில் ஒரு ஆச்சரியம்..!

Saturday, January 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் கூட மறைந்த தலைவர்களின் உருவங்கள் மற்றும் குரல்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மறைந்த பாடகர்களின் குரலுக்கு உயிர் கொடுத்து ’லால் சலாம்’ திரைப்படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் பாடல்களை கம்போஸ் செய்து இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழம்பெரும் பாடகர்கள் தற்கால பாடல்களை பாடுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த முயற்சியை ஏஆர் ரகுமான் லாரன்ஸ் ’லால் சலாம்’ படத்திற்கு முதல் முதலாக பயன்படுத்தி உள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு காலமான பாடகர் ஷாகுல் ஹமீத் மற்றும் 2022 ஆம் ஆண்டு காலமான பம்பா பாக்கியா ஆகிய இருவரது குரல்களை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி ’திமிறி எழுடா’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த பாடலை திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவம் ரசிகர்களுக்கு ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இதேபோன்று பல மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதனை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.