இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால்.. இளையராஜா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்!

இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால் எங்களுடைய சேருமிடம் தமிழ்நாடு தான் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அந்நாட்டிற்கு சென்று இருந்தார் என்பதும் கனடாவில் நடந்த இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. மேலும் கனடா மேயர், ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை அந்நாட்டில் உள்ள சாலை ஒன்றுக்கு வைத்து பெருமைப்படுத்திய தகவலையும் பார்த்தோம்.

அதேபோல் இசைஞானி இளையராஜா சமீபத்தில் புடாபெஸ்ட் என்ற நகருக்கு சென்றிருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘நாங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால் எங்களின் சேருமிடம் தமிழ்நாடு தான்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய திரையுலக பிரபலங்கள்: புகைப்படங்கள், வீடியோக்கள் வைரல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும், மக்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தும், வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து

ஒவ்வொண்ணும் உட்கார்ந்திருக்குய்யா.. ஜிவி பிரகாஷ்-க்கு பாராட்டு தெரிவித்த வைரமுத்து 

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த மெட்டு ஒன்றை பாராட்டி வைரமுத்து கூறிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்: செம க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

நாளை ரிலீஸாக இருந்த முன்னணி நடிகரின் பட ரிலீஸ் ஒத்திவைப்பு:புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரின் படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி சென்சார் பணி காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நீண்ட இடைவெளிக்கு பின் பழம்பெரும் பாடகியை பாட வைத்த டி.இமான்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் பல திறமையான பாடகர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு அளித்து வருகிறார்