சொன்ன சொல்லை காப்பாற்றாத அர்ச்சனா கல்பாத்தி.. என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Sunday,May 05 2024]

பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 12 மணிக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் டைட்டில் வெளியாகாததை அடுத்து சொன்ன சொல்லை அவர் காப்பாற்றவில்லை என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தை தயாரிக்க போவதாக அறிவித்திருந்தார் என்பதும் இந்த படம் குறித்த முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபயரான டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்த நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் ’ஃபயரான டைட்டில் தானே வைத்து விடுவோம்’ என்றும் ’தீப்பொறி திருமுகம்’ என்ற வைக்கலாமா என்று பிரதீப் ரங்கநாதனும் ஜாலியாக தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு இந்த படத்தின் டைட்டிலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது 12 மணிக்கு மேல் ஆகியும் இன்னும் வரவில்லை என்பதை அடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒருவேளை இரவு 9 மணிக்கு வருமோ? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கசிந்த தகவல்படி இந்த படத்திற்கு ’ஃபிளேம்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

இந்த படத்தை 50 முறை பார்த்தேன்.. ரீமேக் செய்யப்பட்ட ரஜினி படம் குறித்து செல்வராகவன்..!

மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தை சுமார் 50 முறை பார்த்து உள்ளேன் என்று இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

மகன் துருவ் நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட விக்ரம்.. நாளை ஒரு விருந்து இருக்குது..!

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வைரமுத்து வளர்ச்சி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லையா? கஸ்தூரிக்கு பதில் அளித்த சீனுராமசாமி..!

இசைஞானி இளையராஜா மற்றும் கவியரசு வைரமுத்து ஆகிய இருவரது பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி வரும் நிலையில் இது குறித்து சீனுராமசாமி கூறிய ஒரு கருத்துக்கு

ஆயிரக்கணக்கான பேருக்கு அசால்டாக சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்.

மெஹந்தி சர்க்க்ஸ் என்ற நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜன்.ஒரு சிறந்த சமையல்காரராக பிரபலம் அடைந்தார்.இன்று பல இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்..

விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த கனகா.

பிறகு நான் கனகாவின் அம்மா தேவிகாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் என் மகள் நிச்சயமாக நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டார்...