வாக்காளர்களே தயாரா...? வாக்களிக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...!

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் , வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கொரோனா காலம் என்பதால் தேர்தலை பாதுகாப்புடன் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாக்காளர்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், அறிவுரைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதைப்பற்றி பற்றி பார்க்கலாம்.

•    நாளை (06.04.2020) நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆகும். 

•    வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத்தவிர வேறு யாரும்,வாக்கு சாவடிக்குள் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது.

•    வாக்களிக்க செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். FFG, ZVA உள்ளிட்ட ஆங்கில எழுத்துக்கள் பொரித்த வாக்காளர் அட்டையை, வாக்காளர்கள் எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆதார் அட்டை,கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் மருத்துவ காப்பீட்டு ஸ்மார்டு கார்டு உள்ளிட்ட இதர அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

•    வாக்களிப்பதற்கு முன் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படும். சானிடைசர் மற்றும் வலது கைக்கு உறை கொடுக்கப்படும். சமூக இடைவெளியுடன் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும்.

•    கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உடல்நிலைக்குறைபாடு உள்ளவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை முகக்கவசங்களுடன் சென்று வாக்களிக்கலாம். 

•    வாக்குச்சாவடிக்குள்  நுழையும் முன், வலது கையில் உறை அணிந்து கொண்டு, தேர்தல் அலுவலரிடம் பூத் ஸ்லிப் அல்லது உங்களது பாகம் வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டையையுடன் காண்பிக்க வேண்டும். 

•    முதலாவது தேர்தல் அலுவலர், உங்கள் அடையாளத்தை உறுதி செய்யும் பொருட்டு, வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை சத்தமாக கூறுவார்.  தேர்தல் முகவர்கள் இதை உறுதி செய்வார்கள். பின் 2-வைத்து தேர்தல் அலுவலரிடம் உள்ள 17A ரிஜிஸ்டரில் கையெழுத்து போட வேண்டும். 

•    அவர் வாக்களிக்க  Voters சிலிப் தருவார். இதை பெற்றுக்கொண்டு 3-வது தேர்தல் அலுவலரிடம் செல்லவேண்டும். இவர் சிலிப்-ஐ  பெற்றுக்கொண்டு  Ballot யூனிட்டில் வாக்கு செலுத்த அனுமதி தருவார்.

•    வாக்களிக்கும் இடத்திற்கு சென்று, வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு நேராக இருக்கும்பட்டனை அழுத்தினால் பீப் சத்தமும், சிவப்பு விளக்கும் எரியும். பின் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் விவிபேட் இயந்திரம்  மூலம் 7 வினாடிகள் காண்பிக்கப்படும். 

•    வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறிய பின், உங்கள் கையுறைகளை கழட்டி பிளாஸ்டிக் குப்பையில் போட்டுவிடலாம்.
இவைதான் நீங்கள் வாக்கு செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், வாக்கு செலுத்தும் முறையும் ஆகும்.
 

More News

ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் ரிலீஸாகும் 20 வருடத்திற்கு முந்தைய கமல் படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் 20 வருடங்களுக்கு முன் நடித்த திரைப்படம் ஒன்று ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டகத்தை விட பெரிசா இருக்கீங்க: யாஷிகாவின் கிளாமர் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்

பிரபல தமிழ் நடிகைகள் பலர் மாலத்தீவு சென்று விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை ஒருவர் கோவா சென்று கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

உதயநிதியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த உதயநிதி தற்போது பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கின்றார். நாளை நடைபெற இருக்கும்

பிரபாஸ் அடுத்த படத்தை இயக்குவது விஜய்யின் சூப்பர்ஹிட் பட இயக்குனரா?

தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் தான் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

முதல்முறையாக இயக்கிய படத்தின் காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டிய தமிழ் நடிகர்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தான் முதன் முதலாக இயக்கிய படத்தின் ஒருசில காட்சிகளை பிரதமரிடம் போட்டு காட்டியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது