close
Choose your channels

உதயநிதியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Monday, April 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த உதயநிதி தற்போது பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கின்றார். நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார் என்பதும் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அவர் தனது அடுத்த படத்தின் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன ’ஆர்டிக்கல் 15’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன ’ஆர்டிக்கல் 15’ திரைப்படத்தில் ஆயுஷ்மான் நடித்த காவல்துறை அதிகாரி கேரக்டரில் தான் உதயநிதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.