'மெர்சல்' டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

  • IndiaGlitz, [Friday,September 22 2017]

1. விஜய் வேஷ்டி சட்டையுடன் ஒரு அரங்கில் நடந்து வரும்போது பின்னால் வடிவேலு வெள்ளை நிற கோட் சூட்டுடன் நிற்கின்றார்

2. இந்த டீசரில் மூன்று நாயகிகளான சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகியோர்களும், வில்லன் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு காட்சியில் கூட இல்லை. அனேகமாக டிரைலரில் இவர்களை எதிர்பார்க்கலாம்

3. அப்பா விஜய்யின் காட்சிகள் கடந்த 70ஆம் ஆண்டுகளில் நடப்பது போல இருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் ஒரு காட்சியில் எம்ஜிஆரின் உழைக்கும் கரங்கள் படத்தின் கட் அவுட் உள்ளது.

4. அதேபோல் எம்.ஜி.ஆரின் ரசிகராக விஜய் இருக்கலாம். அவருடைய வீட்டின் சுவற்றில் எம்.ஜி.ஆர் படங்கள் உள்ளது.

5. மூன்று வித விஜய் டீசரில் தோன்றுவதால் மூன்று விஜய் உறுதியாகியுள்ளது. ஆனால் விஜய்-நித்யாமேனனுடன் ஒரு குழந்தை மட்டுமே ஒரு ஸ்டில்லில் இருப்பதால், ஒரு குழந்தை சிறு வயதிலேயே பிரிந்திருக்கலாம். கிளைமேக்ஸில் இருவரும் இணையலாம்

6. போலந்து நாட்டில் உள்ள PGE Areana ஸ்டேடியத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது

7. விஜய் முட்டி போட்டு உட்கார்ந்திருக்கும்போது வில்லன்களில் ஒருவர் அடி வாங்குகிறார். அனேகமாக இதுதான் இரு விஜய்கள் சந்திக்கும் காட்சியாக இருக்கும்

8. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அனேகமாக அது ஆளப்போறான் தமிழன் பாடலாக இருக்கலாம்

9. ராஜஸ்தான் பின்னணியில் மல்யுத்த காட்சிகளும் பாடல் காட்சிகளும் தெரிகிறது

10. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஒரு சபையில் விஜய் வேட்டிசட்டையுடன் கலந்து கொள்கிறார். 

More News

பிரதமருக்கு முழு ஆதரவு கொடுப்பேன். டுவிட்டரில் ரஜினிகாந்த்

ஒரு பக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் கேரள முதல்வர், டெல்லி முதல்வர் ஆகியோர்களை சந்தித்து அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.

'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சவால் விட்ட தமிழ்ராக்கர்ஸ்

சமீபத்தில் விஷாலின் ஐடி டீம் மற்றும் காவல்துறையினர்களின் முயற்சியால் தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டபோதிலும், திரையுலகை அச்சுறுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ் அட்டகாசம் இன்னும் சற்றும் குறையவில்லை

முதல்வர் ஆக விரும்புகிறேன்: முதல்முறையாக மனம் திறந்த கமல்

கமல்ஹாசன் ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தீவிர அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

கமல்-ரஜினி கட்சியில் சேர மாட்டேன். பிரபல நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். இன்னும் அதிகாரபூர்வமாக கட்சியின் பெயரை அறிவிக்க வேண்டியது ஒன்று தான் பாக்கி.

4 மணி நேரத்தில் குவிந்த லைக்ஸ்கள்: உலக சாதனை செய்த மெர்சல்

உலகின் அதிக லைக்ஸ் பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்டார் வார்ஸ்' படத்தின் லைக்ஸ்களை சமீபத்தில் தல அஜித்தின் 'விவேகம்' டீசர் முறியடித்தது என்பது ஏற்கனவே தெரிந்ததே.