close
Choose your channels

'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சவால் விட்ட தமிழ்ராக்கர்ஸ்

Friday, September 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விஷாலின் ஐடி டீம் மற்றும் காவல்துறையினர்களின் முயற்சியால் தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டபோதிலும், திரையுலகை அச்சுறுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ் அட்டகாசம் இன்னும் சற்றும் குறையவில்லை. ஆன்லைன் பைரஸிகாரர்களை கூண்டோடு பிடிக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் 'துப்பறிவாளன்' உள்பட பல திரைப்படங்கள் முதல் நாளே ஆன்லைனில் வெளிவந்து பயமுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ஒருசில மணி நேரத்தில் உலக சாதனை செய்துள்ள நிலையில் 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு தமிழ்ராக்கர்ஸ் சவால் விடுத்துள்ளனர்.

விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தை நல்ல ஹைகுவாலிட்டி பிரிண்டில் வெளியான முதல் நாளே ஆன்லைனில் ரிலீஸ் செய்வோம் என்று சவால் விடுத்துள்ளனர். தவறு செய்பவர்கள் மறைந்திருந்து செய்யும் காலம் போய் தற்போது நேருக்கு நேர் சவால் விட்டு செய்யும் அளவுக்கு துணிச்சல் கிடைத்துள்ளது. 'மெர்சல்' படக்குழுவினர் ஒட்டுமொத்த திரையுலகினர்களின் ஒத்துழைப்போடு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.