இன்று முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அடுத்த அவதாரம் ஆரம்பம்

  • IndiaGlitz, [Sunday,May 22 2016]

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களில் வெற்றி பெற்றவர். இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்றுமுதல் தொடங்குகிறார்.
அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிக்கும் 'காதலின் பொன் வீதியில்' என்ற படத்தின் படப்பிடிப்பை இன்று அர்ஜுன் ஆரம்பிக்கவுள்ளார். இந்த படத்தை அர்ஜூன் தயாரிப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் சாந்தன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rise in Love' என்ற அடைமொழியுடன் காதல் படமாக உருவாகவுள்ள இந்த படம் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழ் சினிமா வரலாற்றில் 'கபாலி'க்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை முறியடித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகில் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத பெருமை ஒன்று தற்போது இந்த படத்திற்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.....

'பாகுபலி 2' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ஜி.வி.பிரகாஷின் 'கிக்' நாயகி திடீர் மாற்றம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'கடவுள் இருக்குறான் குமாரு" என்ற கிக் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி மற்று&#

சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் போடும் எம்.எல்.ஏ நடிகை

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...

ராஜமெளலி உதவியாளருடன் இணைந்த ரஜினி-விஜய் வில்லன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தில் வில்லனாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு தற்போது இளையதளபதி...