விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அர்ஜூன் சம்பத் ஆவேசம்

விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை ஆதீனத்திற்கு மதுரை மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் இன்று மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளாலும் சினிமா ரசிகர்களாலும் அச்சுறுத்தப்படுகிறார் என்று கூறினார்.

மேலும் விஜய் ரசிகர்கள் ஆதினம் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்றும், அம்மா, அப்பாவை விட விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்றும் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறவேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதினம் மதுரையில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது, ‘விஜய் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் வசனம் பேசுவதால் அவருடைய படத்தை பார்க்காதீர்கள் என்று கூறினார். அதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் போஸ்டர் மூலமும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கிராமத்து தென்றலாகும் ப்ரியா பவானிசங்கர்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

பிரியா பவானி சங்கர் கிராமத்து தென்றல் கேரக்டரில் நடித்து வருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நம்பவே முடியவில்லை: 'விக்ரம்' வசூல் குறித்து உதயநிதி  பதிவு!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து

மருத்துவத் துறையில் ஒரு மைல்கல் சாதனை… புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு!

உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்படும் புற்றுநோய்க்கு நிரந்தர

வீட்டில் யானை தந்தங்கள்… பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஏற்பட்ட புது நெருக்கடி!

பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்': ஃபர்ஸ்ட்லுக் டிரெண்டே முடியாத நிலையில் செகண்ட்லுக்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் 'பிரின்ஸ்' என்று வைக்கப்பட்டுள்ள