லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியில் அதிகமான தமிழ்ப்பாடல்கள் பாடியதால் இந்தி பேசும் வட இந்தியர்கள் கோபத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி விளக்கமளித்திருந்த போதிலும் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த பாடகர்களும், பல திரையுலக பிரபலங்களும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ரசிகர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. அவர்களால் தான் நாங்கள் இந்த இடத்தில் இருக்கின்றோம் என்றும், ரசிகர்களுக்கு நேர்மையாகவே நடந்து கொண்டதாகவும், இனியும் அவ்வாறே நடக்கவிருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இசைக்கு மொழி என்ற ஒன்றே இல்லை என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும் என்றும் பல திரையுலக பிரமுகர்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

More News

அதுக்கு பதிலா நான் தூக்கில் தொங்கிறுவேன்: கஞ்சா கருப்பின் காட்டம் ஏன்?

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய நடிகர் பரணி, நேற்று மீண்டும் தோன்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

கமல்ஹாசனை யாரும் மிரட்டக்கூடாது: நாஞ்சில் சம்பத்தும் ஆதரவு

கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசை கமல் கடுமையாக விமர்சித்து வருகிறார். கமல்ஹாசனின் விமர்சனத்தால் அதிருப்தி அடைந்த தமிழக அமைச்சர்கள் அவரை மிரட்டும் வகையில் பேசி வருகின்றனர்.

அந்த சவுண்டு ஜெயிக்கும். பிக்பாஸ் பரணி குறிப்பிட்டது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட பரணி, இந்த வாரம் கமலுடன் கலந்துரையாடினார்.

தனுஷின் 'மாரி 2' குறித்த மகிழ்ச்சியான செய்தி

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான வெற்றிப்படம் 'மாரி'. இந்த படத்தின் 2ஆம் பாகம் மிக விரைவில் உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

அரசியலை நோக்கி நகர்த்தப்படுகிறாரா கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் சினிமா நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது போல் மற்ற மாநிலங்களில் இருந்திருக்குமா? என்பது சந்தேகமே.