உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Saturday,September 22 2018]

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியில் உலககோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளது. இந்த ஆண்டு உலகக்கோப்பை ஹாக்கி போட்டி வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 16 நாட்டின் அணிகள் கலந்து கொள்ளவுள்ளன

இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை முன்னிட்டு ஒரு பாடலை கம்போஸ் செய்யவுள்ளார். இந்தியாவுக்காக அவர் கம்போஸ் செய்யவுள்ள இந்த பாடல் 'ஜெய் ஹிந்த் ஹிந்த், ஜெய் இந்தியா' என்று தொடங்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு பழம்பெரும் பிரபல இந்தி கவிஞர் கல்ஜர் அவர்கள் பாடல் எழுதவுள்ளார். இவர் கடந்த 1957ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சுமார் 60 வருடங்களாக திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெய்ஹோ, செம்மொழியான தமிழ் மொழியாம்' வரிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த 'ஜெய் ஹிந்த் ஹிந்த் ஜெய் இந்தியா' என்ற பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'செக்க சிவந்த வானம்" 2வது டிரைலர் விமர்சனம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வரும் 27ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் 2வது டிரைலர் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜாவும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தனித்தனியாக இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது.

பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு நடிகையை கிண்டல் செய்த பாஜக

சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 162 ரன்களுக்குள் சுருட்டியது.

உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு ஏஞ்சல்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவனை கடத்தி குடும்பம் நடத்திய இளம்பெண் மீது பாய்ந்த போக்சோ சட்டம்

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சமீபத்தில் இயற்றப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது பெண் மீது போக்சொ சட்டம் பாய்ந்துள்ளது.