close
Choose your channels

ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகை

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜாவும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தனித்தனியாக இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஆனால் இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் டைட்டில் 'தி அயர்ன் லேடி' என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்ட செய்தி வெளிவந்தது. மேலும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியானது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்கும் நடிகை யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏற்கனவே த்ரிஷா உள்ளிட்ட ஒருசில நடிகைகள் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க நடிகை நித்யாமேனன் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகை வரலட்சுமியும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 முதல் ஆரம்பமாகும் என்றும் இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் இயக்குனர் பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.