ஒரே பாடலில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்-ஜிவி பிரகாஷ்-அனிருத்

  • IndiaGlitz, [Sunday,December 09 2018]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இசைப்படமான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இசை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் நாளை அதாவது டிசம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'பீட்டர் பீட்டு எது' என்ற 3வது சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் நாளை வெளியிடவுள்ளார். ஒரே பாடலில் ரஹ்மான், ஜிவி பிரகாஷ், அனிருத் இணைந்துள்ளது ஒரு ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

 

More News

விஜய்சேதுபதியின் '96' பட டைட்டில் '99'; ஆக மாற்றம்

சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படம் '96'. உணர்வுபூர்வமான காதல் திரைப்படமான இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்தது போலவே ரசித்ததால் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அஜித்தின் 'விஸ்வாசம்' மலேசியாவில் இன்று செய்ய போகும் சாதனை

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது

தனுஷ் மகன்களுடன் '2.0' படம் பார்த்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் '2.0'

தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகை! அதிமுகவில் சேருவாரா?

கடந்த 90களில் பிரபலமாக இருந்த நடிகை கஸ்தூரி தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அதிரடி அரசியல் கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே.

ஹீரோவாக மாறிய பிரபல இயக்குனர்

'மின்னலே' படத்தின் மூலம் இயக்குனராகிய இயக்குனர் கெளதம் மேனன் அதன்பின்னர் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'என்னை அறிந்தால்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.