நாளை முதல் ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த மேஜிக் ஆரம்பம்

  • IndiaGlitz, [Thursday,November 29 2018]

இன்று வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு இசை மாயஜாலமே நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில் நாளை முதல் அவருடைய இன்னொரு மாயஜாலம் ஆரம்பமாகவுள்ளது.

ஆம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படம் இசையை மையமாக கொண்ட படம் என்பதால் இந்த படத்தின் பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ரவி யாதவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

More News

புயல் பாதித்த பகுதியிலேயே தங்கி நிவாரண உதவி செய்யும் சூரி

கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சிதைத்து அவர்களுடைய வாழ்வாதாரங்களை நொறுக்கி தள்ளியது.

விக்ரமின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் மலேசியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது

2.0 வெற்றி எதிரொலி: மீண்டும் ரஜினியுடன் இணையும் லைகா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவை உலக சினிமா திரும்பி பார்க்கும்: 2.0 குழுவினர்களுக்கு எஸ்.தாணு வாழ்த்து

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது.

'2.0' திரைப்படத்தை திரையிடக்கூடாது என போராட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி உலகமே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் செய்துள்ளது