'இந்தியன் 2' படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் டுவீட்

  • IndiaGlitz, [Friday,January 18 2019]

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் சில நாட்கள் சென்னையிலும், அதன் பின் உலகின் எட்டு நாடுகளிலும் இந்த படம் உருவாகவுள்ளது. இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகளும் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் 'இந்தியன்' படத்திற்கு ஆஸ்கார் நாயகான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த  நிலையில் 'இந்தியன் 2' படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் இந்த படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் 'இந்தியன் 2' படக்குழுவினர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஷங்கர் அவர்களுக்கும் அவருடைய டீமுக்கும் மேலும் ஒரு வெற்றி படமாக இந்த படம் அமைய எனது வாழ்த்துக்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

'இந்தியன்' படத்தில் ரஹ்மான் இசையில் உருவான 'டெலிபோன் மணிபோல்' பாடல் இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தில் ரஹ்மானை தாங்கள் மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் பலர் இந்த டுவீட்டிற்கு கமெண்ட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

More News

ரஜினியின் 'பெரிய மனுஷன்' தான் கமலின் 'இந்தியன்'

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்

'பேட்ட' படத்தை அடுத்து சிம்ரன் நடிக்கும் புதிய படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினியின் காதலியாகவும் மேகா ஆகாஷ் தாயாகவும் நடித்திருந்த சிம்ரனுக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே.

பாக்யராஜின் 'சின்னவீடு 2' படத்தின் ஹீரோ யார்?

Bhagyaraj-கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருவது கோலிவுட்டில் டிரெண்டாகி வருகிறது.is-directing-Chinna-veedu-Part-2-is-preparing.vpf

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகன்

விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'தமிழரசன்' என்ற செய்தி நேற்று வெளியானது. பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

மீண்டும் இணையும் ரஜினி-கமல்

ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.