close
Choose your channels

ரஜினியின் 'பெரிய மனுஷன்' தான் கமலின் 'இந்தியன்'

Friday, January 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் 'இந்தியன்' திரைப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் ஷங்கர், ரஜினியிடம் தான் கூறினாராம். இந்த படத்திற்கு 'பெரிய மனுஷன்' என்ற டைட்டிலும் வைக்கப்பட்ட நிலையில் ரஜினியால் எதிர்பாராத காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாம். அதன்பின்னர் தான் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைந்தார்.

முன்னதாக கமல்ஹாசன் இந்த படத்தில் கமிட் ஆவதற்கு முன் சேனாதிபதி கேரக்டரில் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை நடிக்க வைக்கவும் சந்துரு கேரக்டரில் நாகார்ஜூனா அல்லது வெங்கடேஷை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாம். மேலும் சத்யராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேனாதிபதி, சந்துரு கேரக்டர்களுக்கு பரிசீலிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.