close
Choose your channels

நேரத்தை நிறுத்த முடியாது, ஆனால் நேரம் நம்ம எங்க வேணும்னாலும் நிறுத்தும்: அருள்நிதியின் 'டைரி' டீசர்

Friday, July 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் நடித்த மௌன குரு உள்பட பல படங்கள் வெற்றிப்படங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த வரிசையில் மேலும் உருவாகியிருக்கும் ஒரு திரைப்படம்தான் ’டைரி’

இந்த திரைப்படத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக அருள்நிதி நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் ’நேரத்தை நம்மால் நிறுத்த முடியாது ஆனால் நேரம் நம்மை எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் நிறுத்தும்’ என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், ரான் எதான் யோஹனன் இசையில், அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ராஜா சேதுபதி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.