சூப்பர்ஹிட் இயக்குனரின் அடுத்த படத்தில் அருண் விஜய் வில்லனா? இன்று முதல் படப்பிடிப்பு!

  • IndiaGlitz, [Friday,July 15 2022]

சமீபத்தில் சூப்பர் ஹிட் வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த படத்தில் ’யானை’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்த அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ என்ற சூப்பர்ஹிட் வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யா நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகிறார்

இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அருண்விஜய் ஏற்கனவே வில்லனாக அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ உள்பட ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மரணத்திற்கு முந்தைய நாள் மரணம் குறித்து பதிவு செய்த பிரதாப் போத்தன்!

நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன்

உங்க வேலை எதுவோ அதை பாருங்க: 56 வயது நபருடன் உறவு குறித்து நடிகையின் விளக்கம்

56 வயதான முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியுடன் நெருக்கமாக இருப்பதாக நடிகை சுஷ்மிதாசென் குறித்த செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்

'மேகம் கருக்காதா', தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' சிங்கிள் பாடல்: எழுதி பாடியது யார் தெரியுமா?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'தாய்க்கிழவி' என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

'தேஜாவு' படத்தை அடுத்து அருள்நிதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா?

அருள்நிதி நடித்த 'டி பிளாக்' என்ற திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் ஜூலை 22ஆம் தேதி அவர் நடித்த 'தேஜாவு' என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரபல இயக்குனர்: வைரல் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலில் விழுந்து பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.